Monday 16 February 2009

குமுதத்தில் அரசுவின் உளறல்கள்....

கடந்த வாரம் குமுதம்(11-2-2009) இதழில், கேள்வி பதில் பகுதியில் ஒரு கேள்வி.

இந்தியாவில் தோன்றிய சிறந்த அரசியல் தலைவர்களின் டாப் 10 லிஸ்ட் தாருங்களேன்?

கேள்வி கேட்டவர்: ஏ.எஸ். யோகானந்தம், ஔவையார்பாளையம்.

அரசுவின் பதில்: 1. மகாத்மா காந்தி 2. ஜவஹர்லால் நேரு 3. டாக்டர் அம்பேத்கர் 4. சுபாஷ் சந்திர போஸ் 5. பெரியார் 6. .எம்.எஸ். நம்பூதிரிபாட் 7.ஜெயபிரகாஷ் நாராயணன் 8. வி.பி. சிங். இதற்கு மேல் தேறவில்லை.

பதில் கூறவேண்டியவன் யோக்கியனாக இருந்தால் பத்துபேருடைய பெயரை கூறி இருக்க வேண்டும் அல்லது அந்த கேள்வியை குப்பை கூடைக்கு அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அரசு என்ற பெயரில் இருக்கும் ஆசாமி என்ன செய்கிறார் தெரியுமா? வேண்டும் என்றே ஒரு எட்டு தலைவர்களுடைய பெயரை மட்டும் கூறிவிட்டு,"இதற்கும் மேல் தேறவில்லை" என்கிறார்.

'இந்த மாதிரி பதில் சொன்னால் குறிப்பிட்ட சில கட்சிகளை சேர்ந்த தொண்டர்களோ அல்லது அந்த தலைவர்கள் பிறந்த சமுதாயத்தை சார்ந்தவர்களோ கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள் அதன் மூலம் பத்திரிகையின் பெயர் வெளிப்படும், தங்கள் பத்திரிகைக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும்' என்பது அவருடைய எண்ணம். இது நமக்கும் தெரியும்.
(அது போலத்தான் நடந்தது, நாடார் சங்கத்தினர் பலர் இதனைக் கண்டித்து சிறை சென்றனர்)


எவ்வளவு மோசமான புத்தி பாருங்கள். நாட்டின் பெருந்தலைவர்களை இப்படியா அவமதிப்பது.
அரசு போன்றவர்கள் இதுபோல எழுதுவதால் காமராஜர் என்னும் பெருந்தலைவர், ஒரு குறிப்பிட்ட ஜாதித் தலைவராக மாற்றப்படுகிறார்.
(நாடார் சங்கத்து காரங்க கண்டனம் பண்ணினாலே, அவர் ஒரு ஜாதித் தலைவராக மாற்றப்படுகிறார் என்றுதானே அர்த்தம், வேறு யாரும்தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே)

சிறந்த தலைவர் என்பதற்கு அரசு வைத்திருக்கும் வரையறை என்னவோ? நமக்கு தெரியாது. ஆனாலும் எந்த வரையரைப் படி பார்த்தாலும், தேறவில்லை என்று சொல்வது அரசுவின் உளறல் அல்லாமல் வேறென்ன?



No comments:

Post a Comment