Sunday 15 February 2009

சூயிங்கத்தை இங்கே துப்பாதீர்...

இரண்டு நாட்களுக்கு முன்பு 'வெண்ணிலா கபடி குழு' படம் பார்ப்பதற்காக சென்னை-திருவான்மியூரில் உள்ள தியாகராஜா தியேட்டருக்கு சென்றிருன்தேன். முந்திய காட்சியை காண வந்த கழுதை ஓன்று சூயிங்கத்தை மென்றுவிட்டு இருக்கையின் கைப்பிடியில் ஒட்டி வைத்துவிட்டு சென்றுவிட்டது. நான் இருக்கையில் அமர்ந்த போது என் கையில் ஒட்டுகிறது அந்த எச்சில் சூயிங்கம்.

இது போல் கழுதைகளை பல முறை பார்த்தாகிவிட்டது. அதனால்தான் இப்போது இதுகுறித்து எழுதவேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

ஒரு முறை எங்கள் கல்லூரியில் இது போலத்தான், ஒருத்தன் சூயிங்கத்த தின்னுட்டு அத டெஸ்க்ல ஒட்டி வச்சான். அத நான் பார்த்துட்டேன் . உடனே
"டேய், ஏண்டா இந்தமாதிரி சின்னத்தனமா நடந்துக்கிற?" என்றேன்.
"என்ன?" ன்னான்.
"சூயிங்கத்த ஏன் டெஸ்க்ல ஒட்டுன?" என்றேன்.

உடனே அவன் "ஏன், சூயிங்கத்த நான் எங்கே ஒட்டிவச்சா உனக்கு என்னல?" என்றான்.

"நீ சூயிங்கத்த ஒட்டணும்னா, உன்னோட வீட்டுல போயி நல்லா ஒட்டு, இங்க ஒட்டுனா அர விழும் அவ்வளவுதான்" என்றேன்.
பின்பு டெஸ்க்ல ஒட்டி இருந்த சூயிங்கத்தக் கொண்டு குப்பத் தொட்டியில கொண்டு போடச் சொன்னேன், போட்டான்.

இன்னொரு சம்பவம்.

அது சென்னையில் உள்ள ஒரு பிரபலமான அச்சு சரிசெய்யும் நிறுவனம். அயல்நாட்டு அச்சு நிறுவனங்களின் வேலையை பெற்று அச்சு செப்பனிட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவார்கள். அங்கே ஆயிரம் பேருக்கு அதிகமானோர் வேலை செய்கின்றனர். அங்கு உள்ள பணியாளர்களுள் சிலர் (படித்த அறிவிலிகள்) சூயிங்கத்த தின்றுவிட்டு வாஷ் பேசின்லயோ அல்லது கழிவறையில் உள்ள யூரினரி குழாய்களிலோ போட்டுட்டு போய்விடுவார்கள். ஆனா அத சுத்தம் பண்ண வருகிற துப்புரவுத் தொழிலாளிகள்தான் பாவம், அந்த குழாய்களிலோ அல்லது வாஷ் பேசின்லயோ ஒட்டப்பட்ட சூயிங்கத்த எடுப்பது கையால் தான் எடுத்தாக வேண்டும்.
தொடர்ந்து இது போல் நடந்ததால் கழிவறையின் வாசலில் போர்டே வைத்துவிட்டார்கள் "தயவு செய்து சூயிங்கத்தை தின்று விட்டு இங்கே துப்பாதீர்கள்" என்று.

அட, படித்தும் அறிவு கெட்ட கழுதைகளே, உங்களுக்கே புத்தி வேண்டாமா?
(இதை படிக்கின்ற அனைவரையும் திட்டுவதற்காக அல்ல, மேற்படி காரியங்களை செய்கிறவர்களுக்கு மட்டும்).

கண்ட கண்ட பாக்குகளை சவித்துவிட்டு கண்ட இடங்களில் துப்புவது, புகையிலைகளை சவித்து துப்புவது, இன்னும் பல சொல்லலாம்.

இதுபோன்ற முட்டாள்தனமான செயல்களை காணும் போது நாட்டில் நிறைய பைத்தியக்காரர்கள் இருப்பது போல தெரிகிறது.
கல்லூரி வரை சென்று வந்த பட்டதாரிகளிலேயே சில அறிவிலிகள் இருக்குதுன்னா படிப்பறிவே இல்லாத மக்களை எப்படி திருத்துவது?


No comments:

Post a Comment