Tuesday 3 March 2009

பெரியாரின் பச்சைக்கல் மோதிரமும் -'வெட்டி' வீரமணியும்

பெரியார் ஒரு பெரிய பச்சைக்கல் மோதிரம் போட்டிருப்பார். கடைசிவரையில் எந்தச்சுழ்நிலையிலும் பெரியாரின் கையைவிட்டு அதைக் கழற்றவேயில்லை. இதைப்பற்றிய பல விமர்சனங்கள் உண்டு. ஒவ்வொரு துறையைச்சார்ந்தவர்களும் அதற்கொரு விளக்கம் சொல்வார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் யாரும் பெரியாரின் பக்கம் கூடப் போயிராதவர்கள்.
.......தமிழ் ஓவியா


பெரியார் அணிந்த்திருந்த பச்சைக்கல் மோதிரம், இவ்வளவு வரலாற்று உண்மைகளைக் கொண்டது என்று அறிந்தும் அதனை ஒரு நடிகரின் கையில் அணியக் கொடுக்கிறார் வீரமணி, என்றால் இது வீரமணியின் அறியாமையா அல்லது வீரமணிக்கு வந்த பதவி கொழுப்பா என்று தெரியவில்லை.

பெரியார் திரைப்படத்தில் பெரியாரை கொச்சை படுத்தி இருப்பதுதான் உண்மை.

அந்த படம் வெளி வந்ததற்கு பதில் அது வெளிவராமல் இருந்திருந்தால், அதுவே நல்லதாக இருந்திருக்கும்.

'கடவுள் இல்லை' என்ற பொன்மொழியை பெரியார் சொன்னது ஒரு பொதுக்கூட்டத்தில், ஆனால் பெரியார் படம் சொல்வது என்ன?

ஒரு ஜோடி செருப்புக்காகவா, பெரியார் "கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை" என்றார்.

அந்த படத்தில் வரும் காட்சி அப்படித்தானே சொல்கிறது?

பெரியாரை பெரியாராக காட்டாமல், வடிவேலு போன்ற ஒரு காமெடியனாகவும், விபச்சார விடுதிக்கு போகும் ஒரு காமுகனாகவும் சித்தரித்திருக்கும் ஒரு படம் பெரியார்.(அது உண்மையாக இருக்கலாம் ஆனால் அவ்வளவு முக்கியத்துவம் நிறைந்ததா என்ன)


அதற்கு ஒரு பாராட்டு விழாவாம், பெரியாரின் மோதிரம் பரிசாம், வெங்காயம்.


படத்தில் சொல்லவேண்டிய உண்மைகள் வேறெதுவும் இல்லையா?

பேரறிஞர் குத்தூசி குருசாமியை ஏன் இருட்டடிப்பு செய்ய வேண்டும்.
சுமார் முப்பது ஆண்டு காலமாக பெரியாரோடு பெரியாராக வாழ்ந்த குத்தூசி குருசாமி அவர்களை வீரமணி கண்டு கொள்வதே இல்லை.

ஒரு உண்மை பெரியார் தொண்டரான அறிஞர் குருசாமியை இன்றைய இளைஞர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் வீரமணிக்கு இருக்கும் தயக்கம் ஏன்?

இன்னொரு முக்கிய விஷயம். அண்மையில் நடந்தது. கருணாநிதியும் வீரமணியும் உண்மையான பெரியாரியலாளர்கள் அல்ல என்பதை உணர்த்தும் சம்பவம்.

தினகரன் என்றொரு கிறிஸ்தவ மத போதகர் இருந்தார். பின்பு இறந்து போனார்( உயிரோடு இருக்கும் போதே சொர்க்கத்துக்குப் போனதாக கதை அளந்தவர். இப்போது எங்கு இருக்கிறாரோ).
தமிழக அரசு சென்னையில் உள்ள க்ரீன்வேய்ஸ் சாலைக்கு மேற்கண்ட நபருடைய பெயரை சூட்ட இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார் வீரமணி.

தினகரன் தமிழ் சமுதாயத்தை ஏமாற்றி பிழைத்தவர், அவர் மக்களுக்கு செய்த நன்மை என்ன? அவரது பெயரை ஒரு முக்கிய சாலைக்கு ஏன் சூட்ட வேண்டும்.

தமிழக அரசு சாலைகளுக்கு இனி பார்ப்பன சங்கராச்சாரி பெயரையும் சூட்டும் என எதிர்பார்க்கலாமா? அவர்கூடத்தான் பள்ளி, தொண்டு நிறுவனங்களெல்லாம் நடத்துறாரு..

*********

'நாத்திகம்' ஆசிரியர் திரு.ராமசாமி அவர்கள் பெரியார் திடல் குறித்தும் வீரமணி குறித்தும் உண்மைகளைச் சொல்லிக்கொண்டிருப்பதால், அதனை பெரியார் திடலுக்கு வரும் வாசகர்கள் படித்து உண்மைகளை அறிந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், 'நாத்திகம்' இதழை யாரும் படிக்கா வண்ணம் பார்த்து வருகிறார் போலி பெரியாரியவாதி கி.வீரமணி.

இவர் செய்வதெல்லாம் பெரியாரியத்திற்கு குழி தோண்டும் வேலையாகத்தான் இருக்கிறது. (பெரியாரியத்திற்கு குழி வெட்டுவதால் 'வெட்டி' வீரமணி என்று பெயர்)

உண்மையான பெரியார் தொண்டர்கள் பெரியாரின் நூல்களை வெளியிட முன்வந்தாலும் அதனை அனுமதிக்காமல் வெட்டியாக அரசியல் செய்து வருகிறார் இந்த 'வெட்டி' வீரமணி.


வாழ்வியல் சிந்தனைகள் வெளியிடும் வீரமணி, அதே வேகத்தையும் முயற்சியையும் பெரியார் நூல்களை வெளியிடுவதில் காட்டி இருந்தால் 'சேது' கால்வாய் திட்டத்திற்கு இந்த சோதனை வந்திருக்காது.
******

'நாத்திகம்' இதழ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் திடல் நூலகத்தில் கிடைக்கும், ஆனால் தற்போது கிடைப்பதில்லை, 'இதற்கான காரணம் என்ன' என்று பெரியார் திடல் நூலகத்தில் இருந்த நண்பர் ஒருவரிடம் கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் 'நாத்திகம் இதழில் 'வீர'மணியை தாக்கி அதிகமாக கட்டுரைகள் வருவதால் தற்போது அதனை பெரியார் திடல் நூலகத்தில் அனுமதிக்கப் படுவதில்லை' என்று.

பச்சைக் கல் மோதிரம் குறித்த உண்மை சம்பவத்தை விளக்கி அதனை ஆவணமாக பெரியார் நினைவிடத்தில் வைப்பது நல்லதா அல்லது, அதனை சத்யராஜ் கையில் அணிவிப்பது நல்லதா?

3 comments:

தமிழ் ஓவியா said...

//பச்சைக் கல் மோதிரம் குறித்த உண்மை சம்பவத்தை விளக்கி அதனை ஆவணமாக பெரியார் நினைவிடத்தில் வைப்பது நல்லதா அல்லது, அதனை சத்யராஜ் கையில் அணிவிப்பது நல்லதா? //

மோதிரத்திற்கு ஒரு புனிதமும் கிடையாது. அது பெரியார் படத்தில் ஊதியம் பெறாமல் நடித்ததற்காக சத்யராஜூக்கு கொடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை அணிந்தால் திவாலாகிவிடும் என்றநிலையில் பெரியார் அணிந்து அதன் பின் சத்யராஜ் அணிந்து திவால் என்னும் மூடநம்பிக்கையை முறியடித்திருக்கிறார்கள்.

இதுவும் ஒரு வையில் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம் தான்.



தும்பி நாத்திகம் இதழை நான் தொடர்ந்து படித்து வருகிறேன். "ஓட்டைச்சட்டியிலும் கொஞுக்கட்டையை வேக வைத்து விடுகிறார் வீரமணி" என்று நாத்திகம் ராமசாமி எழுதியதையும் படித்திருக்கிறேன். அவரின் மகன் திருமணத்தின் போது வீரமணி அவர்கள் நடந்து கொண்ட நாகரிகமான முறை பற்றியும் அறிந்துருக்கிறேன்.

தற்போது நாத்திகம் ராமசாமி எழுதி வருவதையும் படித்து வருகிறேன். வீரமணி நாத்திகம் இதழைப் படிக்கா வண்ணம் பார்த்து வருகிரார் என்பதெல்லாம் உங்களின் மிகைப்படுத்தப்பட்ட கற்பனை.

குத்தூசி குருசாமி அவர்களைப் பற்றி வீரமணி அவர்கள் பேசாமல் இருப்பதே குத்தூசிக் குருசாமிக்கு நல்லது.

பெரியார் இயக்கத்தை விடு வெளியேறிய பிறகு பெரியாரைப் பற்றி குருசாமி எழுதிய எழுத்துக்களைப் படித்தால் "குத்தூசி குருசாமியை எங்கு கண்டாலும் காறித் துப்புங்கள்" என்ற பெரியாரின் பேச்சின் அடிப்படை உண்மை புரியும்.

மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் சுற்றுப் பயணம் செய்து பெரியார் கொள்கைகளை உலகம் முழுவது பரப்பி வரும் வீரமணி அவர்களை பற்றி வெட்டி வீரமணி என்று எழுதும் தாங்கள் உருப்படியாக செய்து வருவதைப் பற்றி விளக்கினால் நாங்களும் அறிந்து கொள்வோம்.

ஆரோக்கியமான நாகரிகமான விவாத்த்தை தொடர்வோம்.

'தும்பி' said...

//மோதிரத்திற்கு ஒரு புனிதமும் கிடையாது. அது பெரியார் படத்தில் ஊதியம் பெறாமல் நடித்ததற்காக சத்யராஜூக்கு கொடுக்கப்பட்டது. அந்த மோதிரத்தை அணிந்தால் திவாலாகிவிடும் என்றநிலையில் பெரியார் அணிந்து அதன் பின் சத்யராஜ் அணிந்து திவால் என்னும் மூடநம்பிக்கையை முறியடித்திருக்கிறார்கள்.//

பெரியார் படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களை விட்டுவிட்டு சில முக்கியத்துவமற்ற சம்பவங்களை படமாக்கி இருக்கிறார்களே அது ஏன் என்பதே என்னுடைய கேள்வி?

பெரியாரின் மோதிரத்திர்க்கென்று புனிதம் எதுவும் இல்லைதான், ஆனால் அதை நடிகர் சத்யராஜ்க்கு அளிக்க வேண்டிய அவசியம் என்ன?

"இதுவும் ஒரு மூட நம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்தான்" என்கிறீர்கள். அதைத்தான் பெரியாரே நிருபித்துவிட்டாரே, மீண்டும் அதனை சத்யராஜ் மீண்டும் நிருபிக்கவேண்டுமா என்ன?
மேலும் அந்த படத்தின் தயாரிப்பாளர்தான் சம்பளம் கொடுக்கவேண்டுமே ஒழிய பெரியார் இயக்கத்தினர் அல்லவே!.

உண்மையைச் சொன்னால், "நீ யார், நீ என்ன செய்துகொண்டு இருக்கிறாய் பெரியார் இயக்கத்திற்காக" என்று வினா எழுப்புகிறீர்கள்.

வீரமணி ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. எத்தனை பேரோ பல முறை அவருடைய ரேட்டைவேடத்துக்காக(('நான் பாப்பாத்திதான்' என்று சொல்லும் ஒருவருக்கு 'சமூக நீதி காத்த வீராங்கணை' பட்டம் கொடுத்து கவ்ரவப்படுத்தல்) எத்தனை முறையோ விமர்சித்தாயிற்று, இதில் நான் வந்து விமர்சிக்க ஏதும் இல்லை.ஆனால் நாட்டில் நடக்கும் தற்போதைய சூழல்களைப் பார்க்கும் போது பெரியார் இயக்கம் என்ன செய்துகொண்டு இருக்கிறது என்று கேட்கத் தோன்றுகிறது.

நீங்களும்தான் 'பெரியார்' திரைப்படத்தைப் பார்த்திருப்பீர்கள் அதில் பெரியார் "கடவுள் இல்லை..." என்று சொல்கின்ற வசனம் எந்த சூழ்நிலையில் வருகிறது. பார்க்க எவ்வளவு முட்டாள்தனமாகவும், சின்னத்தனமாகவும் தெரிகிறது, இதனை நீங்கள் உணரவில்லையா?

தமிழ் ஓவியா said...

பெரியார் உட்பட விமர்சனத்திர்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை உலகத்தில். ஆனால் அந்த விமர்சனம் உண்மையின் பாற்பட்டதாக இருக்க வேண்டும்

பெரியார் இயக்கம் என்ன செய்து கொண்டிருக்கிரது என்பதை குரைந்த படசம் விடுதலை மூலம் அறிந்து கொள்ளலாம்.

Post a Comment